ஓவர் ஸ்பீடில்.. ஓவர் நெருக்கம்.. வந்த வேகத்திலேயே வெளியேறுகிறாரா சுச்சி.. பரபர எதிர்பார்ப்பு

Chennai

oi-Hemavandhana

|

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் சுசித்ரா வந்தார்.. கட்டிப்பிடித்தார்.. பிரச்சனைகளை உண்டு பண்ணினார்.. கடைசியில் வெளியேறவும் போகிறார் போல தெரிகிறது.. வீட்டிற்குள் வந்த வேகத்திலேயே இந்த வாரம் வெளியேறுவது அநேகமாக சுசித்ராவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் வெலைட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தவர் சுசித்ரா.. இதற்காகவே அவர் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு, அதன்பிறகே பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்.

வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே சுரேஷிடம் வம்பை இழுத்தார்.. அப்போதிருந்தே சுசித்ரா பலரது எதிர்ப்பையும் சம்பாதிக்க தொடங்கினார்.

"சீக்ரெட்".. அமித்ஷாவை சந்திக்கவிருக்கும் விஐபி.. தயாரான ரகசிய இடம்?.. தகிக்கும் தமிழக அரசியல்..!

நீதிபதி

முதல் முதலில் நீதிபதியாக தரப்பட்ட டாஸ்க்கையும் சொதப்பி, ஒரு சாராருக்கே தீர்ப்பை தந்து, அதிருப்தியையும் சம்பாதித்தார்.. இதன்பிறகு, பாலாஜியிடம் சென்று நெருக்கமாக பழகினர். ஏற்கனவே பாலாஜி ஷிவானி என்ற ஜோடி காதலில் விழுந்து விட்டார்களா? இல்லையா என்ற குழப்ப நிலையில், சுச்சியும் பாலாஜியுடன் இணைந்தார்.

டாஸ்க்

அவரை கட்டிப்படிப்பதும், முத்தம் தருவதும் என நட்பை நிலைநாட்டி கொண்டே இருந்த நிலையில், மற்றொரு பக்கம் வீட்டிற்குள் சரியாக டாஸ்க்கை விளையாடாமலும் இருந்தார்.. அதற்காக ஜெயிலுக்கும் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டார்.. இதனிடையே, நாமினேஷன் லிஸ்டில் மொத்தம் 7 பேர் வந்தனர்.. இதில் அதிகமான ஓட்டை வாங்கியது சுச்சிதான்.. கிட்டத்தட்ட மொத்த வீடுமே சுச்சிக்கு எதிரான ஒரு மனநிலையில் இருப்பதுபோலவே தெரிகிறது.

எவிக்‌ஷன்

அந்த வகையில், சுச்சி இந்த வாரம் வெளியேறுவார் என்று தெரிகிறது.. இதுவரை 3 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்... முதல் வாரம் மற்றும் தீபாவளி வாரத்தில் எவிக்‌ஷன் எதுவும் நடக்கவில்லை என்பதால், இன்று நிச்சயம் எவிக்‌ஷன் நடக்கும் என்றும், அதில் சுச்சியையே வெளியேற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பு

தனக்கு வீட்டிற்குள் நிறைய எதிர்ப்பு ஓட்டுக்கள் இருப்பதாலோ என்னவோ, இந்த வாரம் நான்தான் வீட்டை விட்டு போகப்போகிறேன் என்று சுச்சி எல்லாரிடமும் சொல்லி கொண்டிருந்தார்.. நேற்றுகூட பாலாஜியிடம் சண்டை போட்டபோது, "இந்த வாரம் போய்விடுவேன், நீ ஹேப்பியா இரு" என்று சொன்னார்.. தற்போது, எல்லாவற்றிற்கும் மேலாக, சுசித்ராவுக்கு தான் மிகவும் குறைந்த அளவு வாக்குகளே கிடைத்திருப்பதால்தான் சுசித்ரா இன்று வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed