நீட் தேர்வு விவகாரம்.. அரசியல் ஆதாயம் தேடுவதாக கட்சிகளுக்கு சென்னை ஹைகோர்ட் கண்டனம்!

சென்னை நீட் விவகாரத்தில் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீட் மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் நீட் மரணத்தை தடுத்திருக்க முடியும் என்ற அவர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு நீட் மரணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறினார்.

அனுமதிக்க வேண்டும்

நீட் மரணத்தை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.

அரசுக்கு எதிராக மனு

இதையடுத்து அவரது முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வரும் 12ஆம் தேதி சூரியபிரகாசத்தின் மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசிய கட்சிகளுக்கு கண்டனம்

அதன்படி சூரிய பிரகாசம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலையை வைத்த அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன.

அரசை குறை சொல்ல முடியாது

முன்கூட்டியே அறிவுரை வழங்காமல், மாணவர்கள் இறந்த பின்னர் கண்ணீர் வடிப்பது தேவையற்றது.
மாணவர்களின் தற்கொலைக்கு அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது.

2 வாரத்திற்கு ஒத்திவைப்பு

மேலும் நீட் தேர்வு தொடர்பாக கோர்ட் பிறப்பித்த உத்தரவை அரசு செயல்படுத்தவில்லை எனக்கூறி விசாரணையை 2 வார காலத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.