தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம்.. புதிய கலெக்டர் நியமனம்

தேனி: தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக எச். கிருஷ்ணன் உன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் சென்னை வணிகவரித்துறை (அமலாக்கம்) இணை ஆணையராக இருந்த ம.பல்லவி பல்தேவ் தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார் இதன் மூலம் தேனி மாவட்டத்தின் 15-வது கலெக்டர் ஆக இருந்தார். அத்துடன், மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் என்ற சிறப்பையும் பல்லவி பல்தேவ் பெற்றார்.

பல்லவி பல்தேவ் தேனி மாவட்டத்தின் கலெக்டராக 3 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக எச். கிருஷ்ணன் உன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed