வச்சு செய்ய போகிறார்களா.. இரண்டுக்கும் இடையே ஏன் 26 நாள் இடைவெளி.. 2019 கண் முன்வந்து பயமுறுத்துதே!

Chennai

oi-Hemavandhana

|

சென்னை: வரும் தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடக்க போகிறது.. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்க போகிறது.. அப்படியென்றால் 26 நாட்கள் எதுக்கு இந்த இடைவெளி?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. ஓட்டு எண்ணிக்கை முடிவுக்கு எதற்காக இவ்வளவு நாட்கள் கால இடைவெளி என்பது குறித்து ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

2011-ல் 5 மாநில தேர்தல் நடந்தது.. 2016-லும் 5 மாநில தேர்தல் நடந்தது.. ஆனால், 2011-ல் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணுவதற்கு ஒரு மாதம் இடைவெளி இருந்தது.. அப்போது கலைஞர் இருந்தார்.. ஏப்ரல் 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மே 13ம் தேதி வாக்கு எண்ணப்பட்டது. சுமார் ஒரு மாத காலம் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜெயலலிதா

2016-ம் ஆண்டு தேர்தல் முடிந்து வெறும் 3 நாளிலேயே வாக்கு எண்ணப்பட்டது.. அப்போது ஜெயலலிதா இருந்தார்.. அதேபோல 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வேறுமாதிரி நடந்தது.ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதன் முடிவு மே 23ம் தேதி வெளியானது. மொத்தம் 35 நாட்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது..

இடைவெளி

இப்பவும் அப்படித்தான் தேர்தல் நடக்க போகிறது.. ஆனால் ஓட்டுக்களை எண்ணுவதற்கு ஏன் இத்தனை நாட்கள் இடைவெளி? இதற்கு முன்பு இவ்வளவு இடைவெளி இல்லையே? வாக்கு சீட்டுகளை எண்ணும் காலத்திலேயே சீக்கிரத்தில் முடிவுகளை அறிவித்துள்ளபோது, எந்திரமயமான வாக்கு முறைக்கு எதற்காக இத்தனை நாட்கள்?

உறுதி?

முறைகேடு நடந்துவிடும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள், ஆனால் அப்படி உறுதியாக சொல்லி விட முடியாது.. அப்படி சொன்னால் தேர்தல் ஆணையத்தையே நாம் சந்தேகப்படும்படி ஆகிவிடும்... தேர்தல் ஆணைய முடிவை யாரும் விமர்சிக்கவும் முடியாது.. தேர்தல் தேதிஅறிவித்தால், அது அறிவித்தது தான்.. மறுப்பு இல்லை.

பாதுகாப்பு

அதுமட்டுமல்ல, நடக்க போவது வெறும் 5 மாநிலங்களில் மட்டும்தான்.. இதில் அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் வேண்டுமானால் பதட்டத்துக்குரியமுறையில் தேர்தல் நடக்கலாம்.. பாதுகாப்புகளை அங்கே பலப்படுத்தலாம்.. ஆனால், மற்ற 3 மாநிலங்களில் அமைதியாக நடக்ககூடிய வகையில்தான் தேர்தல்கள் நடக்கும்.. பெரிய அளவுக்கு பாதிப்புகள், வன்முறைகள் நிகழ வாய்ப்பில்லை.

இடைவெளி

அதேசமயம், ஓட்டு எண்ணக்கூடிய இந்த 26 நாட்கள் கால இடைகாலவெளியை பாஜக அரசு சரியாக பயன்படுத்தி கொள்ள பார்க்கும்.. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு கட்சியினரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு பணிக்காக இருக்கவேண்டிய நிலைமையும் ஏற்படும்.. அதுவும் 3 அடுக்கு பாதுகாப்பு தான் போட வேண்டி இருக்கும்.. இதனால், தேவையில்லாத செலவுதான்..

தேர்தல்

சில நாட்களுக்கு முன்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வந்திருந்தார்.. அவரிடம், வாக்கு பதிவுக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள இடைவெளி 10 நாட்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று ஒருசில கட்சிகள் கோரிக்கை வைத்தன.. ஆனாலும் இப்போது 26 நாட்கள் இடைவெளி விட்டிருப்பது, பல தரப்பையும் அதிருப்திக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த கால இடைவெளி என்பது எப்படி வேண்டுமானாலும் வாக்கு எண்ணிக்கையின் போக்கை மாற்றக்கூடிய போக்காகவே இருக்கும் என்று மட்டும் தெரிகிறது" என்றனர்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed