உலகம் முழுவதும் 11.12 கோடி பேருக்கு கொரோனா! அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு!
Washington
oi-Rayar A
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.12 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24.62 லட்சமாக அதிகரித்துள்ளது
சீனாவிலிருந்து பரவிய கொரோனா ஒரு ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை ஆட்டம் காண வைத்து வருகிறது. மேலும்,. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வேறு பரவி அச்சறுத்தி வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.12 கோடி பேராக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 24.62 லட்சமாகும். அது போல் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8.61 கோடி பேராகும். அமெரிக்காவில் தொடந்து முதலிடத்தில் கொரோனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு புதியதாக மேலும் 76,625 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால் மொத்த பாதிப்பு 28,601,317 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,285 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 507,603 ஆக அதிகரித்து உள்ளது. இங்கிலாந்தில் புதிதாக 12,027 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது. மேலும் 533பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் புதிதாக 51,067 பேருக்கு பாதிப்பும், மேலும் 1,345 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 13,433 பேருக்கு பாதிப்பும், 470 பேர் இறந்தும் உள்ளனர்.
பிரான்சில் 24,116 பேருக்கும், இத்தாலியில் 15,479 பேருக்கும், துருக்கியில் 7,419 பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தொற்று பாதிப்பில் உலகளவில் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் புதிதாக 14,587 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 117 பேர் இறந்துள்ளனர்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed