கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடந்தது.. முதல்முறையாக வீடியோ வெளியிட்ட சீனா! பகீர் காட்சிகள்

Delhi

oi-Velmurugan P

|

டெல்லி: சீனாவின் ஊடக நிறுவனமான ஷென் ஷிவேயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட ஒன்றரை நிமிட வீடியோவில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்கள் மோதியதைக் காட்டுகிறது.

இந்திய இராணுவத்தின் வடக்கு கமாண்ட் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி, , இந்தியா எந்த நிலத்தையும் சீனாவுக்குக் கொடுக்கவில்லை என்றும், சீன ராணுவத்தினருடன் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூயிருந்த நிலையில் சீனாவால் எல்லையில் நடந்தது குறித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய ராணுவத்திற்கும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் (பி.எல்.ஏ) துருப்புக்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல்களை மறைத்துவிட்டது.

அபாண்டமாக புகார்

இந்நிலையில் சீனாவின் ஊடக நிறுவனமான ஷென் ஷிவேயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தங்களை நாட்டை நியாயப்படுத்தி ஒன்றரை நிமிட பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்கள் மோதியது விளக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சீன வீரர்களை அத்துமீறி இநதிய ராணுவம் தாக்கியதாக அபாண்டமாக குற்றம்சாட்டி உள்ளது.

கெட்ட பெயர்

இந்நிலையில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து இந்திய இராணுவத்தின் வடக்கு கமாண்ட் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.கே. கூறுகையில், அங்கு நடந்த ஒன்பது மாத கால மோதலில் "சீனா தனது அடையாளத்தை இழப்பதைத் தவிர வேறு எதையும் அடையவில்லை. அவர்கர்களின் ஒவ்வொரு செயலும் எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ... இந்த செயல்களால் அவர்கள் கெட்ட பெயரைத்தான் பெற்றார்கள், வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.

சீனாவிற்கு கட்டாயம்

கைலாஷ் மலைத்தொடரை இந்திய இராணுவம் கைப்பற்றியது பி.எல்.ஏ-ஐ விட சாதகமாக இருந்ததால் சீனா பங்கோங் த்சோவிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வட கரையின் பிங்கர் 4 வரை எங்கள் பகுதிகளின் சில பகுதிகளை கைப்பற்றியதன் மூலம் சீனர்கள் ஆரம்பத்தில் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

பின்வாங்கிய சீனா

பேச்சுவார்த்தைகள் நடந்த போதும் எங்கும் அவர்கள் செல்லவில்லை... பின்னர், எங்கள் தலைமையிடம் இருந்து அறிவுறுத்தல்கள் கிடைத்தன. ஆகஸ்ட் 29-30 அன்று, நாங்கள் நடவடிக்கையைத் தொடங்கினோம், ரெசாங் லா, தென் கரையில் ரெச்சின் லா, வடக்குக் கரையில் முழு ஆதிக்கம் செலுத்தினோம், அங்கு நாங்கள் முழு சீன ராணுவப்படைக்கு எதிராக படைகளை நிலைநிறுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்தோம். பேச்சுவார்த்தையில் சில வெற்றிகளைப் பெற இது செய்யப்பட்டது. கைலாஷ் வரம்பில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தியதால் இப்போது படைகள் விலகல் நடக்கிறது" என்றார்.

இன்று பேச்சு

இந்நிலையில் பாங்கோங் த்சோவில் படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக இந்தியாவும் சீனாவும் 10 வது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தைகளை இன்று(சனிக்கிழமை) நடத்த உள்ளன. காலை 10 மணிக்கு சீனப் பக்கத்தில் உள்ள மோல்டோவில் இந்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒரு தெளிவான தீர்வு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா உறுதி

முன்னதாக சீன தரப்பு டெப்சாங்கைப் பற்றி விவாதிக்க தயங்கியிருக்கிறது. ஆனால் இந்தியா அனைத்து இடங்களிலும் படைகளை விலக்குவதில் தெளிவாக இருந்தது. எனவே இப்போது பாங்காங் த்சோவில் படைகள் விலக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரால் அது சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது அனைத்து சிக்கல்களையும் தீர்க்க இந்தியா விரும்பவுதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed