என்ஆர்சிஐ ஏற்றுக் கொண்டு... அனைவருக்கும் ஐடி கார்டு தருவோம்... அசாம் பிரசாரத்தில் காங்கிரஸ்

India

oi-Vigneshkumar

|

திஸ்பூர்: தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஏற்றுக் கொண்டு, மாநிலத்திலுல்ள அனைத்து மக்களுக்கு அடையாள அட்டையை வழங்குவோம் என்று அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அசாம் மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் பிரசாரம் மேற்கொண்ட அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, காங்கிரஸ் ஆட்சி என்ஆர்சி-ஐ ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், பாஜக தற்போது என்ஆர்சியை நிறுத்தி வைத்துள்ளது. அதை உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் மாநிலத்தில் அமல்படுத்துவோம். மாநிலத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் அடையாள அட்டையை வழங்குவோம் என்று அவர் பேசினார்.

மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட என்ஆர்சி இறுதி பட்டியலில் விட்டுப்போன 19.06 லட்சம் பேரின் முறையீடுகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிபுன் போரா தெரிவித்தார்,

அசாம் மாநிலத்தில் சுமார் 3.3 கோடி பேர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்ள விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed