தொலைந்தது ஸ்கூட்டி சாவி.. சக மாணவர்களை நம்பி பைக்கில் சென்ற கல்லூரி மாணவி.. கொடூரமாக பலாத்காரம்

India

oi-Velmurugan P

|

புவனேஸ்வர்: ஒடிசாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி தன்னுடன் படிக்கும் சக வகுப்பு மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்து சில வாரங்களுக்கு பின் மாணவி மௌத்தை கலைத்து தைரியமாக வெளியே சொன்னதால் குற்றவாளிகள் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒடிசாவின் சுந்தர்கார்க் மாவட்டம் மலிதியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண் லாவண்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கின்ஜிரிகேலா என்ற ஊரில் உள்ள கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இவர் கல்லூரிக்கு தினமும் ஸ்கூட்டியில் சென்று வந்துள்ளார்.

கடந்த ஜூலை 26ம் தேதி இவரது ஸ்கூட்டி சாவி கல்லூரியில் தொலைந்துவிட்டது. இதனால் செய்வதறியாது தவித்த மாணவி லாவண்யாவிடம், அவருடன் படிக்கும் சக வகுப்பு மாணவர்களான நிலிந்ரா ஓரம், ஜெய்தாப் கிஷான் ஆகியோர் தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டில் விடுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கு மாணவி லாவண்யாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி இரண்டு மாணவர்களும் தங்களது இருசக்கர வாகனங்ளை எடுத்துக்கொண்டு மாணவி லாவண்யாவுடன் கல்லூரியை விட்டு புறப்பட்டுள்ளனர். அப்போது மூன்றாவதாக ரஞ்சித் ஓரம் என்ற மாணவனும் அவர்களுடன் சென்றுள்ளான்.

ஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க!!

5 பேர் செய்த கொடூரம்

செல்லும் வழியில் புடுதிங் என்ற அடர்ந்த வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை கல்லூரி மாணவர்கள் நிறுத்தினர். அப்போது மேலும் இரண்டு இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 5 பேரும் லாவண்யாவை காட்டுக்குள் தூக்கிக்சென்று பலவந்தமாக மாறி மாறி பாலியல் பலாலத்காரம் செய்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாணவி போரடியும் கெஞ்சியும் பாரத்துள்ளார். ஆனால் அவர்கள் இரக்கம் காட்டவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு பின்னர் மாணவியிடம் நடந்ததை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டி உள்ளனர்.

கல்லூரிக்கு அனுப்பவில்லை

பின்னர் அந்த இளைஞர்கள் மாணவியை அவளது ஊரில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதன்பிறகு நடந்ததை அறிந்த மாணவியின் தாய் வெளியில் சொல்லாமல், தனது மகளை கல்லூரிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். அப்போது மாணவியின் உறவினர்கள் ஏன் கல்லூரிக்கு அனுப்பவில்லை என்று கேட்ட போது எந்த பதிலும் அளிக்கவில்லை.

போலீசில் புகார்

இந்நிலையில் மூன்று வாரங்கள் அமைதியாக இருந்த மாணவி லாவண்யா தனக்கு ஏற்பட் ட கொடூரத்தை போலீசில் சொல்ல முடிவு செய்தாள். அதன்படி சுந்தாகர்க் மாவட்டம் மாடல் போலீஸ் ஸ்டேசனில் தனது தாய் உடன் சென்று மாணவர்களை பற்றி புகார் அளித்தார்.இந்த புகாரை ஏற்று உடனே வழக்கு பதிவு செய்த மாடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகன்ந்தா சாய், விரைந்து விசாரிக்க உத்தரவிட்டார்.

ஒருவருக்கு வலைவீச்சு

இதன்படி குற்றவாளிகள் 4பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

தைரியமாக சொல்ல வேண்டும்

லாவண்யா தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் தானே என்று எண்ணி கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து திரும்பிய போது இப்படி துயர்த்தை அவர்களாலேயே சந்தித்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தைரியமாக வெளியில் சொன்னால் மட்டுமே அதற்கு காரணமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதால், தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என்பதே எதார்த்தமான உண்மை. அப்போது தான் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையை போலீசார் எடுப்பார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் யில் பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed