சென்னையில் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை... பெட்ரோல் 1 லி. ரூ.92.59; டீசல் 1 லி. ரூ.85.98!

Chennai

oi-Rayar A

|

சென்னை: சென்னையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை சதத்தை நோக்கி முன்னேறி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசு அதிகரித்து ரூ.92.59-க்கு விற்பனை செய்யப்படுகிது ஒரு லிட்டர் டீசல் விலை 35 காசுகள் அதிகரித்து 85.98-க்கு விற்கப்படுகிறது.

ச ர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை அந்த எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயித்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 20 காசுகள் அதிகரித்து ரூ.92.59-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 35 காசுகள் அதிகரித்து 85.98-க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு பொருட்களின் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமையல் சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் விலையும் சதத்தை நோக்கி முன்னேறி வருவதால் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed