வியாச ஜெயந்தி: குரு பவுர்ணமி நாளில் திருமலையில் கருட வாகனத்தில் உலா வரும் மலையப்பசாமி

Astrology

oi-Jeyalakshmi C

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழாவின் போது 5ஆம் நாள் கருடவாகன சேவை நடைபெறும். மாதந்தோறும் பவுர்ணமி நாளில் மலையப்ப சாமி கருடவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். வரும் 24ஆம் தேதி வியாச ஜெயந்தி குரு பவுர்ணமியை முன்னிட்டு கருட வாகன உற்சவம் நடைபெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் திருவிழாக்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து வருகிறது.

தற்போது கொரோனா தொற்று பரவல் காலமாக இருப்பதால் மிகக்குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு மூலம் டிக்கெட் வாங்கி உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் கோலாகலம்

ஜூலை மாதம் ஏழுமலையான் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 5 ஆம் தேதி திங்கட்கிழமை சர்வ ஏகாதசியும், 6ஆம் தேதி வசந்த மண்டபத்தில் ராவண வதம் பாராயணமும் நடக்கிறது.

வரும் 14ஆம்தேதி மகரிஷி திருநட்சத்திர பூஜையும், 16ஆம் தேதி ஸ்ரீவாரி ஆடிமாத முதல் தேதி விசேஷ பூஜை உற்சவமும் நடைபெறும். 20ஆம் தேதி சயன ஏகாதசி பூஜை மற்றும் சாத்தூர் மாத விரத பூஜை நடக்கிறது.

21ஆம் தேதி நாராயண கிரியில் சத்திர ஸ்தாபிதம் மற்றும் 24ஆம் தேதி வியாச ஜெயந்தி குரு பவுர்ணமியை முன்னிட்டு கருட வாகன உற்சவம் நடைபெறுகிறது.

திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மலையடிவாரத்தில் தீவிர பரிசோதனை செய்த பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்கள்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed

English summary

Guru purnima 2021: Malayappasamy traveling in garuda vakana sevai will be held on July 24 at Thirumalai Ezhumalayan Temple in honor of Vyasa Jayanti.