வின்டர் அட்டாக்.. பனிக்காலத்திற்காக காத்திருக்கும் சீனா.. லடாக்கில் படைகள் குவிப்பு.. பகீர் திட்டம்!

India

oi-Shyamsundar I

|

லடாக்: லடாக்கில் சீனா இரண்டு இடங்களில் தற்போது படைகளை குவித்து வருகிறது. குளிர்காலத்தை கருத்தில் கொண்டு மொத்தம் இரண்டு இடங்களில் சீனா படைகளை குவித்து வருகிறது.

தைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...!!

இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் சீனா படைகளை பின்வாங்கிக் கொள்ளும் என்று உறுதி அளித்து இருந்தாலும் கூட இன்னும் பல இடங்களில் இருந்து சீனா படைகளை பின்வாங்கவில்லை.

பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து சீனா படைகளை வாபஸ் வாங்காமல் இருக்கிறது என்று கூறுகிறார்கள். முக்கியமாக குளிர் காலம் வர இருப்பதை மனதில் வைத்து சீனா இப்படி செய்கிறது என்கிறார்கள்.

அம்பலமான தந்திரம்.. பாங்காங் திசோவில் படகுகளை இறக்கிய சீனா.. புதிய டென்ட்கள்.. படைகள் குவிப்பு!

மோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம்

சீனா எப்படி

இந்த நிலையில் தற்போது எல்லையில் மூன்று இடங்களில் சீனா படைகளை வாபஸ் வாங்காமல் இருக்கிறது. அதில் இரண்டு இடங்களில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.

  • ஹாட்ஸ்பிரிங்ஸ் கோக்ரா கட்டுப்பாட்டு பகுதி 14ல் படைகள் பின்வாங்கப்படவில்லை
  • பாங்காங் திசோ பிங்கர் 5 எனப்படும் கட்டுப்பாட்டு பகுதி 5ல் புதிய படைகள் குவிப்பு
  • பாங்காங் திசோ பிங்கர் 6 எனப்படும் கட்டுப்பாட்டு பகுதி 6ல் புதிய படைகள் குவிப்பு

இதனால் அந்த இடங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தியா மறுப்பு

எல்லையில் இரண்டு நாட்டு படைகளை வாபஸ் வாங்கி இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் நாங்கள் படைகளை வாபஸ் வாங்கிவிட்டோம், என்று சீனா கூறியது. ஆனால் இதை இந்தியா மறுத்து இருந்தது. லடாக்கில் மொத்தமாக இன்னும் படைகள் வாபஸ் வாங்கப்படவில்லை.சீனா எங்களுடன் இணக்கத்துடன் செயல்பட்டு கண்டிப்பாக படைகளை வாபஸ் வாங்கும் என்று நம்புகிறோம், என்று இந்தியா குறிப்பிட்டுள்ளது

என்ன திட்டம்

இந்த நிலையில் லடாக்கில் சீன ராணுவம் குளிர் காலத்தில் தாக்குதல் நடத்த திட்டமிடலாம் என்று கூறுகிறார்கள். அதன்படி பாங்காங் திசோ பகுதியில் பிங்கர் 5 மற்றும் 6ல் சீனா புதிய டென்ட்களை அமைகிறது. இந்த டென்ட்கள் குளிர்காலத்தை தாங்குவதற்கு என்று ராணுவம் அமைக்கும் சிறப்பு டென்ட்கள். இதை அங்கே சீனா அமைக்கிறது என்றால் குளிர்காலத்தில் சீனா ஏதாவது தந்திரம் செய்ய நினைக்கலாம் என்று ராணுவ தரப்பு தெரிவிக்கிறது .

அதிக வீரர்கள்

இதுபோல் மொத்தம் 12 டென்ட்களை சீனா அமைத்துள்ளது. இன்னும் புதிய டென்ட்களை அமைக்க சீன இடங்களை சரி செய்து வருகிறது. அதேபோல் இதற்கு முன் சீனா அமைத்த டென்ட்களை விட இது பெரிய டென்ட்கள் ஆகும். இதன் உள்ளே 40க்கும் அதிகமான வீரர்கள் இருக்கலாம். 480க்கும் அதிகமான வீரர்கள் உள்ளே இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

மோசமான திட்டம்

இதனால் இந்தியாவிற்கு எதிராக சீனா குளிர் காலத்தில் ஏதாவது செய்யலாம், குளிரை பயன்படுத்தி தாக்கலாம் என்று சீனா நினைக்கலாம் என்கிறார்கள். சீனா எதற்கோ திட்டமிடுகிறது. வரும் நாட்களில் சீனாவின் திட்டம் அம்பலம் ஆகும் என்று கூறுகிறார்கள். இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஹூடா இதை உறுதி செய்தும் இருக்கிறார். இதனால் இந்தியா எல்லையில் தயாராகி வருகிறது.

தயாராகி வருகிறது

இந்தியாவும் எல்லையில் தனது படைகளை குவித்து வருகிறது, குளிர் காலத்திற்கு ஏற்றபடி இந்தியா தயாராகி வருகிறது. மொத்தம் இந்த குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இந்தியா 40 ஆயிரம் வீரர்களை குவித்து உள்ளது. அதேபோல் குளிர் காலத்திற்கு ஏற்றபடி அங்கு டென்ட்களை தயார் செய்து வருகிறது. இதனால் இந்தியா எப்போதும் பதிலடிக்கு தயாராக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

சொல்ல முடியாது

இதற்கு முன்பே ராஜ்நாத் சிங் இதுகுறித்து குறிப்பிடும் போது, எல்லையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இப்போது என்னால் எதையும் உறுதி அளிக்க முடியாது.எல்லையில் என்ன நடக்கும். சீனா மொத்தமாக பின்வாங்குமா என்பதை உறுதியாக கூற முடியாது, என்று குறிப்பிட்டு இருந்தார். இதை அடுத்தே ராணுவ வீரர்கள் எல்லையில் தயாராக இருக்கிறார்கள் எனப்படுகிறது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed