யாருமில்லாத நேரத்தில் 17 வயது பெண் காரியம்.. செல்போன் மெசேஜ்களில் சிக்கிய ரோமியோ... இந்தூர் பகீர்!

India

oi-Hemavandhana

|

போபால்: 17 வயது பெண்ணை மிரட்டி மிரட்டியே.. தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளும்வரை கொண்டு சென்று விட்டுவிட்டார் ஒரு இளைஞர்.. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

இந்தூர் பகுதியில் இந்த பெண் 12-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.. இவரை ஒரு இளைஞர் காதலித்து வந்துள்ளார்.. ஸ்கூலுக்கு வரும்போதும், போகும்போதும் பின்னாடியே சென்று லவ் டார்ச்சர் தந்துள்ளார்.

தன் பின்னால் வர வேண்டாம் என்றும், காதலிக்க இஷ்டமில்லை என்றும் பலமுறை மாணவி சொல்லியும் அந்த இளைஞர் கேட்கவில்லை.. தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியே வந்துள்ளார்.. மேலும், பெண்ணின் செல்போனில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி, டார்ச்சரும் செய்துள்ளார்

அந்த இளைஞர் மீது ஏற்கனவே போலீசில் கிரிமினல் வழக்குகள் உள்ளன.. இது அனைத்துமே பெண்ணுக்கு தெரியும் என்பதால், இளைஞரை வெறுத்தபடியே இருந்திருக்கிறார்... இப்போது பிளஸ் 2 பரீட்சைக்கு படித்து வருவதாகவும், நல்ல மார்க் எடுத்து பெரிய படிப்பு படிக்க ஆசை இருப்பதாகவும், அதனால் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் ஏற்கனவே கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார்.. அப்போதும் இளைஞர் கேட்காமல் தொல்லை தந்து வந்தார்.

கடந்த திங்கட்கிழமையன்றுகூட, பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட அவர், வீடு புகுந்து மிரட்டி இருக்கிறார்.. தன்னை காதலிக்காவிட்டால் மொத்த குடும்பத்தையும் நாசம் செய்துவேன் என்றார்.. ஏற்கனவே கிரிமினல் கேஸ்களில் இவர் சிக்கி உள்ளதால் அந்த பெண் அதிகமாக பயந்துவிட்டார்.. தம்மால் குடும்பத்தினர் உயிருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அப்போதே தூக்குப்போட்டு தற்கொலையே செய்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து, வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்குள் நுழைந்தபோதுதான், மகளின் சடலம் தூக்கில் தொங்கியபடி கிடந்ததை கண்டு அலறி துடித்தனர்.. உடனடியாக போலீசுக்கும் தகவல் பறந்தது.. பெண்ணின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. பிளஸ் 2 தேர்வு சரியாக எழுதாததால்தான் தற்கொலை செய்து கொண்டதாக எல்லாருமே நினைத்தனர்.

திரும்பி வந்துட்டேனு சொல்லு.. அரிசி ராஜாடா.. 8 மாசங்களுக்கு பிறகு கூண்டிலிருந்து ரிலீஸான யானை

ஆனால், ரிசல்ட் முடிவில் இவர் 74 சதவீத மார்க்குகளை வாங்கியிருக்கிறார்.. இந்த மார்க்குகளை பார்த்து பெற்றோர் துடிதுடித்து அழுதனர்.. இதற்கு பிறகுதான் ஒருதலை காதல் விவகாரம் இவர்களுக்கு தெரியவந்தது.. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த இளைஞர் மீது போலீசில் புகார் தந்திருக்கிறார்கள். அந்த பெண்ணின் செல்போனுக்கு வந்த மெசேஜ்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed