மதுரையில் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்.. நடந்த ஷாக் சம்பவம்... சிசிடிவி காட்சி

மதுரை: மதுரை அருகே திருநகரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர் தங்க செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்ற 62 வயது மூதாட்டி கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பரித்துவிட்டு தப்பியுள்ளார்.

இது குறித்து திரு நகர் காவல் நிலையத்தில் மூதாட்டி மல்லிகா அளித்த புகாரின் பேரில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து செய்தபோது செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் மூதாட்டியை நீண்ட நேரமாக பின் தொடர்ந்து வந்துள்ளதும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சூழலைப் பயன்படுத்தி மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துச் செல்வதும் தெரியவந்துள்ளது.

இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். பட்டபகலில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed