திமுகவுக்கு எதிராக நேரடி அட்டாக்.. குடும்ப அரசியல், ஊழல்.. வரிசையாக லிஸ்ட் போட்டு சீறிய அமித் ஷா

Chennai

oi-Veerakumar

|

சென்னை: தமிழகத்திலும் வாரிசு அரசியல் ஒழித்து கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பாஜகவுடன், அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர்.

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி ஓபிஎஸ் சொன்னது இருக்கட்டும்.. எடப்பாடியார் போட்டாரு பாருங்க ஒரே போடு

அச்சம் இல்லை

பின்னர் நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: தமிழகத்தில் இப்போது மீனவர்கள் அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள். உலக நாடுகள் இப்போது இந்தியாவை பார்க்கும் கண்ணோட்டத்தையே மோடி மாற்றியமைத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஊருடுவிய தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்று வீழ்த்தியுள்ளது. இனி வரும் காலங்களில் நாம் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையுள்ளது.

மோடியின் இலக்கு

தமிழகத்திற்கு நான் இப்போது வந்துள்ள இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை உறுதி செய்ய விரும்புகிறேன். நரேந்திரமோடி, அரசியல் களத்துக்கு வந்த பிறகு மூன்று விஷயங்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அதில், வெற்றியும் கண்டுள்ளார். ஊழல்வாதம், பரம்பரை மற்றும் குடும்ப அரசியல் மற்றும் சாதிய அரசியல் ஆகிய மூன்றுக்கு எதிராகவும் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

மக்கள் பாடம் புகட்டுவார்கள்

குடும்ப அரசியல் பற்றி இப்போது நான் பேச விரும்புகிறேன். தேசிய அளவிலும், மாநில அளவிலும் குடும்ப அரசியல் நடத்தி வருகின்றன சில கட்சிகள். ஆனால், குடும்ப அரசியல் நடத்தக்கூடிய கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் ஒரு கட்சி வாரிசு அரசியல் நடத்துகிறது. அந்த கட்சியில் ஜனநாயகமே இல்லை. தமிழகத்திலும் குடும்ப அரசியல் நடத்துபவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

2ஜி ஊழல்

எனக்கு ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ், திமுக கூட்டணி ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். இவர்களுக்கு, ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது, என்ன அதிகாரம் இருக்கிறது. 2ஜி அலைக்கற்றை மட்டுமில்லாமல், ஏகப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஊழல் செய்தவர்கள் இவர்கள். மத்திய அரசு துரோகம் இழைத்தது என குற்றம் சாட்டுகிறார்கள் திமுக தலைவர்கள். நீங்கள் 10 ஆண்டு காலம் மத்தியில் அங்கம் வகித்தீர்களே தமிழ்நாட்டுற்கு என்ன செய்தீர்கள்? மோடி அரசு தமிழகத்துக்கு செய்த நல திட்டங்களை நான் பட்டியலிட்டு சொல்ல தயாராக உள்ளேன். நீங்கள் தயாரா?

திமுக மீது தாக்கு

ஊழல் குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதற்கு முன்பாக உங்கள் குடும்பத்தை சற்று திரும்பி பாருங்கள். அப்போதுதான் ஊழல் எது, ஊழல் இன்மை என்பது எது என்பது உங்களுக்கு புரியும். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார். அரசு விழாவில், எதிர்க்கட்சிகளை அமித் ஷா விமர்சனம் செய்துள்ளது ஒரு பக்கம் என்றால், அமித் ஷாவின் சமீபத்திய பேச்சில் நேரடியாக திமுகவை தாக்கி பேசியதும் இதுதான் முதல் முறையாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed