தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.. அன்புடன் அமித்ஷா தமிழில் ட்வீட்

Chennai

oi-Vishnupriya R

|

சென்னை: தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

சென்னையில் ரூ 62 ஆயிரம் கோடியில் திட்டப் பணிகள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று தொடங்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இன்று காலை டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகை தந்தார்.

மதியம் 2 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அமித்ஷாவை முதல்வரும் துணை முதல்வரும் வரவேற்றனர். இதையடுத்து சாலை மருங்கிலும் அதிமுக, பாஜக தொண்டர்கள் புடைச்சூழ வரவேற்பு அளித்தனர்.

வழியெங்கும் அமித்ஷாவின் கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பல சிறுமிகள் பாரதமாதா வேடமிட்டு அமித்ஷாவுக்கு வரவேற்பளித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா சிறிது தூரம் நடந்தே சென்று தொண்டர்களுக்கு கையசைத்தார்.

இதையடுத்து எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்ற அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் ட்வீட் போட்டுள்ளார். அதில் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ள அவர் சென்னை வந்தடைந்தேன்! தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.

இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்! என ட்விட்டரில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed