தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 7 பேர் மரணம்.. 448 பேர் பாதிப்பு

Chennai

oi-Velmurugan P

|

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,47,385 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 4147 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது முற்றிலும் குறைந்துவிட்டது. உயிரிழப்பும் குறைந்துவிட்டது குணம் அடையுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது,.

பிப்ரவரி 19ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 448 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் இங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,47,385 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம் தமிழகத்தில் இன்று மட்டும் 467 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 8,30,787 ஆக உயரந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்புடன் 4147 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் 3 பேர் அரசு மருத்துவமனையிலும் இறந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக 12,451 பேர் பலியாகி உள்ளனர். முன்பு ஒப்பிடும் போது இப்போது உயிரிழப்பு பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 3 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 136 பேர் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 49 பேரும், செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 31 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 16 பேர், கன்னியாகுமரியில் 10 பேர், ஈரோட்டில் 17 பேர், நீலகிரியில் 11 பேர், சேலத்தில் 12 பேர், தஞ்சாவூரில் 12 பேர், திருப்பூரில் 16 பேர், திருச்சியில் 11 பேர், திருவாரூரில் 10 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed