கல்யாணமாகி ஏழே மாசம்.. எப்ப பார்த்தாலும் அதே வேலையாபோச்சு.. புருஷனை உணவில் விஷம் வைத்து கொன்ற மைதிலி

Erode

oi-Velmurugan P

|

ஈரோடு: கல்யாணம் ஆன ஏழு மாதத்தில் அடிக்கடி பாலியல் உறவு வைத்து டார்ச்சர் செய்த கணவனை உணவில் விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியில் வசித்து வந்தவர் நந்தகுமார் (வயது 33). இவருக்கு இவருக்கு கடந்த 7 மாதங்கள் முன்பு மைதிலி (வயது 20) என்பவரை திருமணம் செய்தார். இவர்கள் அந்தியூர் காலனியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்கள்.

நந்தகுமார் தன்னிடம் உள்ள 3 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்தபடி அந்தியூர் ஜீவா செட் பகுதியில் உள்ள மாவு மில்லில் வேலையும் பார்த்து வந்தார்,

உணவு கசப்பு

இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி காலை நந்தகுமார் தனது தோட்டத்தில் விவசாய பயிர்களுக்கு மருந்து அடித்தா. அதன் பின்னர் வீட்டிற்கு சென்று காலை உணவு சாப்பிட்டார். அப்பொழுது உணவு கசப்பாக இருந்திருக்கிறத. மனைவியிடம் இதுபற்றி கேட்டுவிட்டிருக்கிறார். ஆனால் மனைவி எதையோ சொல்லி சமாளித்துள்ளார்.

சாப்பிட முடியவில்லை

இதனிடையே அதிகம் சாப்பிட முடியாமல் சிறிது சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார். வேலைக்கு சென்ற இடத்தில் தான் கொண்டுவந்த மதிய உணவை எடுத்து சாப்பிடும் பொழுது மீண்டும் கசப்பாக உள்ளது என்று சொல்லி கீழே கொட்டியிருக்கிறார். இதனிடையே உடலில் மாற்றங்கள் தெரிந்திருக்கிறது.

சிகிச்சை பலன் இல்லை

இதனால் கடந்த 31ஆம் தேதி அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் உடலில் விஷம் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

உணவில் விசம்

இந்நிலையில் நந்தகுமார் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது தனது மனைவி தனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்திருக்கலாம் என வாக்குமூலம் கொடுத்தாராம். அதன் பேரில் போலீசார் நந்தகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மைதிலியிடம் விசாரணை நடத்தினார்கள்.

அடிக்கடி பாலியல் உறவு

அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது. மைதிலி போலீசாரிடம் கூறும் போது, நான் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். ஆனால் என் கணவர் நந்தகுமார் என் இரவு பகல் பாராமல் தாம்பத்திய உறவு வைத்து அடிக்கடி தொந்தரவு செய்துகொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்து உணவில் விஷம் வைத்து கொடுத்தேன்" இவ்வாறு போலீசாரிடம் மைதிலி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்தியூரில் பரபரப்பு

இதனையடுத்து மைதிலி மீது கொலை வழக்குப்பதிவு செய்த அந்தியூர் போலீசார், அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அடிக்கடி பாலியல் உறவு வைத்து டார்ச்சர் செய்த கணவனை உணவில் விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed