எல்லா தரிசனமும் எங்களுக்கேவா.. சித்துவிடம் செல்லம் கொஞ்சம் ரசிகர்கள்!

Television

lekhaka-V vasanthi

|

சென்னை: ரசிகர்களுக்கு இந்த மாதிரி தரிசனத்தை காட்டிடீங்கன்னா உங்க வீட்டுக்காரர் கோச்சுக்கப் போறார் என்று ரசிகர்கள் விஜே சித்துவை கலாய்த்துத் தள்ளுகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே போதும் அதில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை விஜே சித்து தான்.

இவர் தொகுப்பாளராக இருக்கும் போது இருந்த ரசிகர்களை விடவும் முல்லை கதாபாத்திரத்துக்கு தான் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது.

அப்படியே வெளியே வந்துட்டீங்களா மோனிஷா.. நக்கலடிக்கும் ரசிகர்கள்!

ஹாட்டான போட்டோ

இப்போது அவரது ரசிகர்களே அதிர்ச்சியாகவும் அளவிற்கு ஒரு போட்டோ சூட்டை வெளியிட்டிருக்கிறார். அதுவும் விரைவில் திருமணமாக இருக்கும் நிலையில் இந்த மாதிரி இவர் திடீரென்று கவர்ச்சியில் இறங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் முல்லை கேரக்டரில் கலக்கிக் கொண்டிருப்பவர்.

கவர்ச்சிகரம்

திடீரென்று என்னதான் ஆச்சு இந்த மாதிரி பண்ணுகிறார் என்று பலரும் குழம்பி போய் இருக்கிறார்கள் .அந்த அளவிற்கு ஸ்டைலை மாற்றி போட்டோஷூட் நடத்துகிறேன் என்று ரொம்பவும் வித்தியாசமாக மாறிவிட்டார் .சீரியலில் எண்ணை தேய்த்து தலை முடியை பின்னி போட்டுக்கொண்டு நடித்திருக்கும் இவர். தற்போது கர்லிங் ஹேரோடு ஃப்ரீயாக அதை பறக்கவிட்டு லகங்கா ட்ரெஸ்ஸில் ஒரு போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார்.

தலையை லைட்டா விரிச்சு

இந்த மாதிரி உடையை பலர் போட்டு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்கள் .ஆனால் அவர்களை எல்லாம் பொறுத்து கொண்ட ரசிகர்களால் இவரை இந்த மாதிரி பார்ப்பதற்கு தான் பொறுக்க முடியவில்லையாம். திடீரென்று இடுப்பு மட்டுமல்ல மொத்த உடம்பையும் வெளியில் தெரிகின்ற அளவிற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருப்பதை பார்த்து தான் ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருகிறார்கள் .ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்றால் நெட்டிசன்களுக்கு கேட்கவா வேண்டும் அவர்களும் நன்றாக ரசித்து விட்டுதான் கலாய்த்து வருகிறார்கள்.

இப்படி திணறடிக்கிறாரே

இவர் சீரியலில் மட்டும்தான் அமைதியின் உருவமாக பொறுமையின் எல்லை ஆக இருப்பார் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இவர் விஜே வாக இருக்கும்போது பேச்சால் அனைவரையும் திணறடித்தவர் அது மட்டுமல்லாமல் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் என பல முகங்கள் இருந்தாலும் டான்ஸிலும் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்.

கதிருடன் டான்ஸ்

இவரும் இவருடன் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜோடியாக நடிக்கும் கதிரும் இணைந்து விஜய் டிவியில் கலக்கலாக டான்ஸ் ஆடி ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்கள். இவருடைய ஆட்டத்தை இன்றுவரையிலும் பலரால் மறக்க முடியவில்லை. அந்த அளவிற்கு தனது திறமையை நிரூபித்து ஜொலித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சேட்டைகாரியான இவர் சூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி இவர் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக எடுத்து வெளியிட்டு வருவார்.

ஆர்மியின் உற்சாகம்

இதையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இவருக்கு ஆர்மி அமைத்து ரசிகர்கள் பட்டாளத்தை பெருகி வருகிறார்கள். எப்போதுமே ரசிகர்களின் செல்ல தலைவியாக இருக்கும் இவர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுப்பதிலும் தவறுவதில்லை. இவருக்காக ஆர்மி அமைத்து ஃபேன்ஸ் பேஜ்சுகளை வைத்திருக்கும் ரசிகர்களிடம் இவர் நேரடி தொடர்பிலும் இருக்கிறாராம்.

செம சூப்பர்

அவர்களின் பிறந்தநாள் விழாக்களுக்கு சர்ப்ரைஸாக சென்று திடீரென்று அவர்களை அதிர்ச்சி ஆகி இருக்கிறார். அதனால் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் பட்டாளம் பெருகி வருகிறது. ஆனாலும் இவர் தற்போது எடுத்திருக்கும் போட்டோஷூட் பற்றி தான் அனைவரின் பேச்சுக்களும் இருக்கின்றன. இவருடைய போஸ்டரை பார்த்ததும் கமெண்ட் மலைகளை குவித்து வருகிறார்கள் பலர் இந்த மாதிரி போஸ் எல்லாம் வேண்டாம் என்றுதான் கெஞ்சி வருகிறார்கள் . அந்த அளவிற்கு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed