உதயநிதியின் கன்னத்தை தொட்டு தடவி.. பூரித்து போய்.. ஒரே நாளில் நாகையை அரச வைத்த மாஸ் பிரச்சாரம்

Chennai

oi-Hemavandhana

|

சென்னை: "ரொம்ப குறைவான நபர்களே பிரச்சாரத்தில் பங்கேற்றும் எங்களை போலீசார் கைது செய்கிறார்கள்... ஆனால் பீகார் தேர்தலில் அமித்ஷா மோடி, கலந்து கொண்டார்கள்... அவர்களை கைது செய்யவில்லை... எங்கள் பிரச்சாரத்தை ஒடுக்கவே கைது செய்கிறார்கள்" என்று நாகையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வரும் தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்கிவிட்டார்.. இதற்காக, நேற்றே திருக்குவளை கருணாநிதி பிறந்த வீட்டில் இருந்து இந்த பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

ஆனால், அனுமதி இன்றி பிரச்சாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார்... எனினும், இன்று மறுபடியும் நாகை நாகை அக்கரை பேட்டை மீன் பிடி துறைமுகத்திற்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது உதயநிதியை மீனவ மக்கள் திரண்டு சென்று வரவேற்றனர்.

அதிலும் பெண்கள், உதயநிதியின் கன்னத்தை தடவி, தங்கள் மகிழ்ச்சியையும், பூரிப்பையும் வெளிப்படுத்தினர்.. பிறகு மீனவர்களோடு படகில் பயணம் செய்தார் உதயநிதி.. கொஞ்ச நேரம் அந்த படகையும் உதயநிதியே ஓட்டினார்.. அதை எப்படி ஓட்ட வேண்டும் என்று அங்கிருந்தோர் சொல்லி தரவும், அதன்படியே படகை செலுத்தினார்.

இதையடுத்து, மீனவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.. பிரச்சாரமும் முடிந்த நிலையில், போலீசார் உதயநிதியை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.. இந்த கைது சம்பவத்தை கண்டித்து திமுகவினர் தரையில் படுத்தும், உதயநிதியை கைது செய்து அழைத்து செல்லப்பட்ட ஜீப்பை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திமுகவினருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.

"நவீன சாணக்கியர் அமித் ஷா".. ஒரே போடாக போட்ட ஓ.பி.எஸ்.. உறுதியானது அதிமுக பாஜக கூட்டணி!

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "என்னுடைய பிரச்சாரத்தை கண்டு அதிமுக அரசு பயப்படுகிறது.. ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி.. என்னுடைய பிரச்சாரத்தை தடுக்கும் வகையில் கைது செய்கிறார்கள்... ரொம்ப குறைவான நபர்களே பங்கேற்றும் கைது செய்கிறார்கள்... ஆனால் பீகார் அமித்ஷா மோடி, கலந்து கொண்டார்கள்... அவர்களை கைது செய்யவில்லை... எங்கள் பிரச்சாரத்தை ஒடுக்கவே கைது செய்கிறார்கள்" என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed