"பேச மாட்டியாடா".. தவித்து போன இளம் விதவை.. காதலனுக்கு மெசேஜ் அனுப்பி.. பொள்ளாச்சி பகீர்..!

Coimbatore

oi-Hemavandhana

|

கோவை: "பேசமாட்டியா" என்று காதலனை கேள்வி கேட்டு மெசேஜ் அனுப்பிய விதவை பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது கேஎல்எஸ் நகர்.. இங்கு வசித்து வந்தவர் புவனேஸ்வரி. கல்யாணமாகிவிட்டது.. 13 வயதில்ஒரு மகன் இருக்கிறான்..

ஆனால், 2 வருஷத்துக்கு முன்பு புவனேஸ்வரியின் கணவன், உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்.. அதனால் புவனேஸ்வரி தன் மகனுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பொழுதை கழிக்க ஃபேஸ்புக்கில் நிறைய நேரம் செலவிட்டு வந்தார் புவனேஸ்வரி... அப்போதுதான் காஜா மொய்தின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.. இருவரும் நட்பானார்கள்.. நட்பு கள்ளக்காதல் ஆகிவிட்டது.

கணவனை இழந்து தனிமையில் இருந்த புவனேஸ்வரிக்கு, காஜாவின் துணை பெரும் ஆறுதலை தந்துவிட்டது.. இழந்த சந்தோஷத்தை எல்லாம் திரும்ப பெற்று விட்டதாகவே நினைத்து பூரித்து போனார்.. பல முறை இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக புவனேஸ்வரியுடன் காஜா சரியாக பேசவில்லையாம்... நேரில் வந்து சந்திப்பதையும் நிறுத்திவிட்டாராம்.. இதனால் புவனேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார்.. பலமுறை செல்போனுக்கு கூப்பிட்டாலும், காஜா போன் எடுக்கவில்லை என தெரிகிறது.. வேறு நம்பரில் இருந்து புவனேஸ்வரி கூப்பிட்டாலும், அந்த நம்பரை காஜா கட் செய்துவிட்டாராம்.

இதனால், மேலும் மனமுடைந்த புவனேஸ்வரி, காஜா மொய்தீனுக்கு பேசமாட்டியா.. நான் என் வாழகை இன்றுடன் முடித்து கொள்கிறேன் என்று வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினார்.. அதன்படியே, அன்று இரவே வீட்டில் தூக்கு போட்டு தற்கொலையும் செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி போலீசார் விரைந்து வந்து புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்ம் செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 13 வயது மகன் என்னாவான்? அப்பாவும் இல்லாமல் எங்கு போவான்? என்றுகூட யோசிக்காமல், புவனேஸ்வரி எடுத்த இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை தந்துவருகிறது.. தாய், தகப்பன் 2 பேருமே இல்லாமல் அந்த குழந்தை கதறி கொண்டிருக்கிறான்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed