"திரும்பிப் போங்கள் அமித்ஷா".. நேற்று முதல் விடாமல் டிரெண்ட் அடித்த GoBackAmitShah

சென்னை: அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முதலே ட்விட்டரில் Go Back Amit Shah என்ற ட்ரெண்ட் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. அமித்ஷாவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் மறுபுறம், பாஜகவினர் மற்றும் ஆதரவாளர்கள் சார்பில் தொடங்கப்பட்ட TN Welcomes Amit Shah என்ற ட்ரெண்ட் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வரும்போது அவரது எதிர்ப்பாளர்கள் சார்பில் Go Back Modi என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு இந்திய அளவில் முதலிடம் பிடிக்கப்படும். இது ஒவ்வொரு முறையும் தொடருவதைக் கண்ட பாஜகவினர் TN Welcomes Modi என ட்ரெண்ட் செய்து அதையும் முன்னணி ட்ரெண்டுகளில் கொண்டுவந்துவிடுவர்.

இந்த முறை அமித்ஷாவுக்கும் இதேபோன்ற ட்ரெண்ட் போர் தொடங்கியுள்ளது. அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் நேற்று முதலே ட்விட்டரில் Go Back Amit Shah என்ற ட்ரெண்ட் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed