ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள்.

பைரவர் ஜென்மாஷ்டமி | கடனை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி 19/11/2019 

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.

இன்று தேய் பிறை அஷ்டமி பைரவர் வழிபாடுபைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும்.அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை இன்று 27 முறை ஜெபிக்கவும்ஸ்ரீ சக்தி கணபதியே துணை!


கீழ்க்கண்ட மந்திரத்தை இன்று 108 முறை ஜெபிக்கவும் 

ஸ்வர்ணாகர்ஷண பைரவ காயத்ரி:

ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹிதன்னோ : 

ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்

#ஸ்வர்ணாகர்ஷண

#பைரவ_அஷ்டகம்

- 8 முறை ஜெபிக்கவும்-

#தனம்_தரும்

வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும் சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனேதனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

#வாழ்வினில்

வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

#முழுநிலவதனில்

முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்.

#நான்மறை

ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

#பூதங்கள்

யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான் நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

#பொழில்களில்

மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கலனாய் இருந்திடுவான்நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

#சதுர்முகன்

ஆணவத் தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான் புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

#ஜெய_ஜெய

வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய் ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.-


நன்றி நன்றி நன்றி ????வாழ்க வெல்க வளர்க ????