ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: கடக ராசிக்காரர்களுக்கு கவலைகள் தீரும் காலம்

Astrology

oi-Jeyalakshmi C

சென்னை: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு தனவரவும், சந்தோஷமும் அதிகரிக்கும் மாதமாக அமைந்துள்ளது. சந்திரன் பத்தாம் வீட்டில் அமர்ந்து இருக்கும் போது மாதம் தொடங்குகிறது. ராசிக்குள் சூரியன்,புதன், இரண்டாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் கேது ஏழாம் வீட்டில் சனி எட்டாம் வீட்டில் குரு, லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் பயணம் செய்வதால் மன கவலைகள் நீங்கி நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதமாக உள்ளது.

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: மிதுன ராசியில் பிறந்தவர்கள் பத்ரா யோகத்தால் புது பதவி வரும்

இந்த மாதம் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். வளர்ச்சியும் முன்னேற்றமும் வேகமாக இருக்கும். தெளிவும் உற்சாகமும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதிகளில் சூரியன், சுக்கிரன், புதன் இடப்பெயர்ச்சியும் சாதகமான நிலையில் உள்ளதால் முன்னேற்றமுத் முயற்சிகளுக்கு வெற்றியும் கிடைக்கும்.

அப்பாவின் உதவியால் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பெண்கள் கோபமான வார்த்தைகளை கட்டுப்படுத்தவும். வேலை மாற்றம் தொடர்பான செய்திகள் தேடி வரும்.

லாபம் அதிகரிக்கும்

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. சந்திராஷ்டம நாட்கள் தவிர ராசிநாதன் சந்திரன் பயணத்தால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தகவல் தொடர்பில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாலும். சிறந்த நன்மைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கமிஷன் தொழில் பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். மிகச்சிறந்த முன்னேற்றங்கள் ஏற்படும்.

உற்சாகமான மாதம்

செவ்வாய் பகவான் குடும்ப வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். காதல் வாழ்க்கையில் கவலைகள் நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். மனைவி வழியில் வருமானம் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். வண்டி வாகனம் தொடர்பான செலவுகள் வரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது அவசியம்.

வேலையில் முன்னேற்றம்

சூரியன் சொந்த வீட்டில் இருந்து மாத பிற்பகுதியில் வாக்கு ஸ்தானத்திற்கு மாறும் போது பண வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். அஷ்டம குருவினால் இந்த மாதம் சில பாதிப்புகள் வந்தாலும் பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை. சனியால் சங்கடங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். செவ்வாய் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மாத பிற்பகுதிகளில் வெற்றிகள் தேடி வரும்.

காதல் வாழ்க்கை

சுக்கிரன் மாத பிற்பகுதியில் நீச்சமடையும் போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் திருமண பேச்சுவார்த்தைகளில் சில தடைகள் வந்தாலும் பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் தொடர்பாக நல்ல செய்திகள் தேடி வரும்.

சிவ தரிசனம் செய்யவும்

சொத்து வீடு வாங்கும் விசயமாக பேசலாம். பணம் கொடுக்கல் வாங்கல் விசயமாக சில பிரச்சினைகள் வரலாம். ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீர்கள். உடற்பயிற்சி செய்வது அவசியம். தூக்க குறைபாடு வரலாம் தியானம் செய்வதன் மூலம் மனம் அமைதியடையும். திங்கட்கிழமை சிவபெருமானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed

English summary

August matha Rasi palan tamil 2021 Check out the Katagam Rasi palan for english month of August 1st 31, 2021.